பொதக்குடியில் இருந்தாலும் பிசினஸ்

பண்ணலாமா...........

Tuesday, March 16, 2010

மணலில் மலர்கிறது மின்சாரம்

அமெரிக்காவை அசத்துகிறார் இந்தியாவில் பிறந்த ஒரு விஞ்ஞானி
சராசரி இந்தியர்களை போல உயரமான மெலிந்த கருத்த உருவம்.பளிரென்று கண்கள், சத்ரிய கூர்மையான மூக்கு .விஞ்ஞானி டாக்டர்.கே.ஆர்.ஸ்ரீதர் பேசத்துவங்குகிறார் மேடையின் ஒரு புறத்தில் எதோ ஒன்றை துணியால் மூடி வைத்திருகிறார்கள்.தேர்தெடுத்து வார்த்தைகளில், தெளிவான உச்சரிப்பில் அந்த பெரிய மேடையில் நடந்த வண்ணம் பேசுகிறார்.
நீங்கள் தயாரிக்கும் மின்சாரத்தில் அப்படி என்ன ஒரு மந்திர சக்தி இருக்கிறது என்று எல்லோரும் கேட்கிறார்கள்.இதுதான் அந்த மந்திர சக்தி ! என்று சொல்லியபடி மூடி இருக்கும் துணியை விலகுகிறார்.ஒரு கண்ணாடி பெட்டகம் ,அதற்குள்ளே மணல்.சாதாரனமாக கடற்கரையில் நாம் பார்க்கும் மணல்!
"உலகின் எந்த கண்டத்திலும் ,கடற்கரைகளில் எளிதாக கிடைக்கும் இந்த மணல்தான் எங்கள் தயாரிப்பின் அடிப்படை.இதில் ஜிர்காநியம் ஆக்சைட் இருக்கிறது .இதில் இருக்கும் ஒரு வேதிய பொருள் பிரித்து இந்த ஃப்யுல் செல்லை தயாரிதிருகிரோம் என்று சொல்லும் ஸ்ரீதர் , "இதை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை .இது 1980ல் ஆர்தர் நான்சைட் என்பவற்றின் கண்டுபிடிப்பு . நாங்கள் அதை நீண்ட ஆறைசிகளுக்கு பின், பிரச்சனைகளை களைந்து ,சிறப்பான தொழில் நுட்பத்துடன் ,அதிக செலவில்லாத எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக்கொண்டு ,இந்த தயாரிபிர்கான மூலபோருல்லை உருவாக்கி ,இந்த
ஃப்யுல் செல்களை வடிவமைதிருகிறோம்.இதை புளூம் எனெர்ஜி செல் என்று அறிமுகபடுத்த விரும்புகிறேன் .என்று சொல்லிய வண்ணம் , அந்த கண்ணாடி பெட்டகத்திற்குள் கையைவிட்டு துழாவி இரு சதுர மஞ்சள் வண்ண அட்டைகளை எடுத்துகாட்டுகிறார்.இதுதான் அந்த அந்த மந்திர சக்தி மணல் சதுர தட்டை வடிவத்தில் மணல்!

"இம்மாதிரியான ஃப்யுல் செல்கள் முன்னரும் தயாரிக்கபடுகிறது .ஆனால், அதற்கு பிளாட்டினம் போன்ற விலையுயரிந்த எளிதில் கிடைக்காத போர்ட்கள் பயன்படுத்தப்பட்டன. அதிக செலவில்லாமல் மணலில் இருந்து எடுத்த வேதியதை மாவாக்கி இம்மாதிரி ஃப்யுல் செல்லாக உருவாகும் முறையை நாங்கள் கண்டுபிடுதிருகிரோம் .பௌடேரிலிருந்து பவர் என்பது எங்களது தொழில்நுட்பம். இந்த செல் 25 வாட் மின்சாரம் தருகிறது . ஆராய்ச்சியை துவங்கிய காலத்தில் இதில் கிடைத்தது 5 வாட் . இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொருத்து இருந்து பாருங்கள்.இந்த மாதிரி
ஃப்யுல் செல்களை இனைத்து தயாரித்த இந்த அமைபிளிருது கிடைக்கும் மின்சாரம் ஒரு சாதாரண அமெரிக்க வீட்டிக்கு 24 x 7 ல் 365 நாட்களுக்கும் போதுமானது " என்று சொல்லிய வண்ணம் ஒரு கையால் தரையிலிருந்து தூக்கி ஒரு செங்கல்லின் வடிவத்திலுள்ள கருப்பு கட்டையை காட்டுகிறார். " இதைபோல பல கட்டிகளை இன்னைத்து உங்கள் குளிர்சாதனப்பெட்டி வடிவில் அமைத்தால், அது ஒரு பெரிய கடையின் மின்சாரதேவைக்கு போதும். அதைவிட பெரிய வடிவில் அமைகப்படவைகல்லை இன்னைத்து ஒரு கார் நிறுத்த கூடிய இடத்தில நிறுவினால், அது ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு வீண்டிய மின்சாரத்தை தரும். செலவு மிக குறைவு. இன்று ஒரு கி. வாட். 40 சென்ட் (அமெரிக்க நாணயத்தில் 40 பைசா).தேவையும் உற்பத்தியும் அதிகரிக்க அதிகரிக்க விலை குறையும் .இதை நாங்கள் "புளூம் சர்வர்" என அழைக்க விரும்புகிறோம் ஒரு நிறுவனத்தில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் அதிகமாக அதிகமாக எப்படி சர்வர்கள் அதிகமாகிறதோ அதுபோல் உங்கள் தேவைக்கு ஏற்ப புளூம் சர்வர்களை அதிகபடுத்தி எவ்வளவு வேண்டுமானாலும் மின்சாரம் பெற்றுகொள்ளலாம்" என்றார் ஸ்ரீதர்.
இந்த அறிமுக விழாவில் கலந்துகொண்ட கலிபோர்னியா மாநில கவர்னர் ஆர்னால்ட் ஷுவர்ஸ்கர் (ஹாலிவுட் நடிகர்) ஸ்ரீதரை கட்டி அனைத்து "இந்த மனிதரை நேசிக்கிறேன். இவரது கண்டுபிடிப்பால் இன்று கலிபோர்னியா மாநிலமும்,நாளையே அமெரிக்காவும், தொடர்து உலகமும் புதிய மின்சக்தி பெறப்போகிறது"என்று சொன்னதை டி. வி. இல் உலகம் பார்த்தது.
ஸ்ரீதர், சென்னை பல்கலைகழகத்தில் மெக்கானிகல் என்ஜினியர் பட்டம் பெற்றார். பின் இல்லினாயிஸ் பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அவர், அமெரிக்க வின்வெலி நிறுவனமான நாசாவின் ஆலோசராக பணியாற்றினார். அங்கு செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களை ஆக்சிஜெனாக மாற்றுவது என்பதை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார் அந்த வேலையை விடுவிடு புளூம் எனெர்ஜி என்ற இந்த நிறுவனத்தை துவங்கி இருபதற்கு காரணம் "இது உலகில் மக்களுக்கு உதவதோடு ,பல மாற்றங்களையும் நிகழ்த்தும்" என அவர் ம்புவதுதான். ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்த விஷயம், பள்ளிகுழந்தைகளோடு உரையாடுவது (அமெரிக்கவில் கிண்டர்கார்டன் இருந்து 12 ம் வகுப்புவரை உள்ள குழந்தைகள் "k12குழந்தைகள் " என்றுகுறிப்பிடுவார்கள். அந்தகுழந்தைகளிடம் ,கணிதம் , அறிவியல், பாடகளில் ஆர்வம் எற்படுதும் பணிதான் ஸ்ரீதரின் பொழுதுபோக்கு ).அவருக்கு இரண்டு குழந்தைகள். கலிபோர்னியா மாநிலத்தில் வசிக்கிறார் .
உலகின் பெருகிவரும் மின் தேவையை பூர்த்தி செய்ய மற்றுமொரு மின்சக்தி பிறந்து இருபது மகிழ்ச்சி தரும் செய்தி .அதைவிட மகிழ்ச்சி தருவது ,அதை கண்டு பிடித்தவர் ஒரு இந்தியர்.அதுவும் சென்னையில் படித்த இந்தியர்!

Wednesday, March 10, 2010

மாட்டுச் சாணத்திலிருந்து மின்சாரம்!

அமெரிக்க வெர்மாண்ட் மாநிலத்தின் பொது மின் உற்பத்தி
நிறுமத்திலிருந்து -CVPS(Central Vermont Public Service)
அறியப்பெறும் ஒரு பாடம்!


வேண்டாமென்று மாடுகள் கழிக்கும் சாணத்திலிருந்து
"சாண எரி வாயு" (Cobar gas) தமிழகத்தில் ஊரெங்கும் தயாரித்ததை
எண்பதுகளில் பார்த்திருக்கிறேன். அது பெரிய இயக்கமாகவே
அரசாங்கத்தால் நடத்தப்பட்டதென்று நினைக்கிறேன், மேலதிக
தகவல்கள் என்னிடம் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட மாடுகள்
வைத்திருந்தவர்களின் வீடுகளில் கூட அரசு உதவியுடன்
"சாண எரி வாயு" கலன்கள் பதித்து, அடுப்புகளை விறகுகளிலிருந்தும், மண்ணெண்ணையிலிருந்தும் விடுவிக்குமுகமாகவும்,
மாட்டுச் சாணக் கழிவினை பயன்படுத்துமுகமாகவும்
அந்த முயற்சி இருந்தது. பயன்பாட்டுக் காரணமாகவோ,
சூழ்நிலைப் பாதுகாப்புக் காரணமாகவோ அந்த முயற்சி
தோல்வியைத் தழுவியது.

வெர்மாண்ட் மாநிலம் முழுமைக்கும், மாட்டுப் பண்ணைகளுக்கு
பெயர் போனது. வெர்மாண்டின் இலையுதிர்காலத்து மர இலைகளின்
நிறமாற்றமும், குளிர்காலத்தின் பனிமலைகளில் நடைபெறும்
பனிச்சறுக்கும் கொணரும் பயணிகள் தான் பெரு வருமானமாக
இருந்தாலும், பண்ணைகளுக்கு முக்கிய வருமானத்தில்
பெரும்பங்கு உள்ளது.

இணையத்தில் படித்த தகவலில், வெர்மாண்ட்டில் மாட்டுச்
சாணத்திலிருந்து வெற்றிகரமாக மின்சாரம் தயாரித்து மக்களுக்கு
அளிப்பது சாத்தியமென்பது, நாளை நமது ஊரிலும் நடக்க வாய்ப்பு
இருப்பதெனக் காட்டுகிறது. பண்ணைகளில் வீணாக்கப்படும்
மாட்டுச் சாணம், அதிக மீத்தேன் வாயுவை விடுவிக்கும்,
இந்த மீத்தேன் வாயு, கரியமில வாயுவைவிட சூழலுக்கு
பெருங்கேடு தரும்.இவர்கள் மாட்டுச்சாணத்தை, பெரிய மூடிய
காற்றுப்புகா உலையிலிட்டுப் பின், சாணத்திலிருந்து வரும்
மீத்தேன் வாயுவை எரித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றனர்.
எரிப்பதனால் வரும் கரியமில வாயு மீத்தேனை விட சூழலுக்கு
குறைவான தீங்கு செய்வதால், இது ஏற்புடையதாக இருக்கிறதென
தெரிவிக்கின்றனர்.

பண்ணைகளில் மின்சாரம் தயாரிக்கும் உலை நிறுவுவதற்கு
பெருஞ்செலவு ஆகுமென்றாலும், CVPS-ன் பங்களிப்பாலும்,
மின்சாரத்தை விற்பதால் வரும் வருமானத்தாலும் அதை
சரிக்கட்ட முடியுமென்று தெரிவிக்கின்றனர். இதுவரை
2500 CVPS பயனர்கள் இந்த மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.

சில சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் இந்தியாவில் மாட்டுச்
சாணத்திலிருந்து வெளிப்படும் மீத்தேன் வாயுவால்
சுற்றுப்புற சூழலுக்கு பெருங்கேடென குற்றம்சாட்டி வருவது
நினைவுக்கு வருகிறது. இதுபோல் மாட்டுச் சாணத்திலிருந்து
மின்சாரம் தயாரித்து, மீத்தேன் உமிழ்வை குறைக்கும்
முயற்சி அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்குமென
எண்ணுகிறேன்.

நடைமுறைப்படுத்துவதில் சிக்கலாக இருக்கக் கூடியவை
1) மின் உலை நிறுவதில் ஆகும் பெருஞ்செலவு
2) நிறுவுவதற்கான தொழில்நுட்பம் அறிதலும்
3) வெர்மாண்ட் பண்ணைகளில், சில நூறு மாடுகளாவது இருக்கும்,
எண்ணிப்பார்க்கையில் கூட்டுறவாய் செய்தால்தான் நம் ஊருக்கு
இது ஒத்துவருமோ என்ற கேள்வி எழுகிறது.

பின் குறிப்பு:-
இந்த பதிவை எழுதி முடித்துப் பதிவதற்குமுன்,
மேலதிக தகவலுக்காக இது குறித்து கூகுள் செய்ததில்,
தஞ்சாவூர் சக்கரபள்ளி ஊராட்சியில், மகளிர் சுய உதவிக் குழுவினர்
அரசு உதவியுடன் 7.9 கோடி செலவில் மிகப்பெரிய முயற்சியை
முன்னெடுத்து சென்று கொண்டிருப்பது குறித்து தெரிந்துகொள்ள
முடிகிறது. மாட்டுச்சாணம் மட்டுமல்லாமல், மனிதக் கழிவுகளையும்
இங்கே பயன்படுத்தி வருகின்றனர். தஞ்சாவூர் முமுமைக்கான,
பெரிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாக இது நடப்பது
அறிய வந்ததில் எனக்குப் பெரு மகிழ்ச்சி!

Saturday, March 6, 2010

இன்றைய தேதியில் இந்தியாவின் மிக முக்கியமான வண்ண மீன் வளர்ப்பு மையம் என்றால் அது சென்னைதான்! கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வண்ண மீன் வளர்ப்புத் தொழில் இரண்டு மடங்காக வளர்ந்திருப்பது மிகப்பெரிய வளர்ச்சி.

‘நம்மால் எப்படி திடீரென்று மீன் வளர்ப்புக்குப் போகமுடியும்’ என்று யோசிக்கிறீர்களா..? இதோ வழிகாட்டுகிறார் மாதவரத்தில் உள்ள ‘மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய’த்தின் பேராசிரியர் ஃபெலிக்ஸ்.

வண்ண மீன்கள் அல்லது அலங்கார மீன்கள் வளர்ப்பில் இன்டர்நேஷனல் ஹப்பாக எல்லோரும் கருதுவது சிங்கப்பூரைத்தான். ஆனால் இன்று இலங்கை, மலேஷியா போன்ற நாடுகளும் வண்ண மீன் வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை முன்பு கொல்கத்தாவில்தான் அதிகமான வண்ண மீன்கள் உற்பத்தி ஆயின. பின்பு அது மும்பைக்கு மாறியது. ஆனால், இன்று அந்த இடத்தை சென்னை பிடித்துவிட்டது. இங்கு உற்பத்தியாகும் மீன்கள்தான் இந்தியா முழுக்கச் செல்கிறது. கூடவே அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.

வண்ண மீன் வளர்ப்புத் தொழிலில் இருக்கும் வருமானம் மிகமிக அதிகம். ஆனால், அதற்கேற்ற அளவுக்கு இங்கு இந்தத் தொழில் வளராமல் இருப்பதற்குக் காரணம் மக்களிடம் சரியான விழிப்பு உணர்வு இல்லாததுதான். இன்றைய நிலையில் நமக்குத் தேவையான அளவில் சுமார் 70 சதவிகிதத்தை மட்டுமே நம்மால் உற்பத்தி செய்ய முடிகிறது.

மிகக் குறைந்த முதலீட்டில், மிகக் குறைந்த இடத்தில் வண்ண மீன்களை வளர்க்கலாம். முப்பதாயிரம் ரூபாயும் ஒரு சென்ட் இடமும் இருந்தால் இந்தத் தொழிலில் இறங்கிவிடலாம். பெண்களுக்கு மிகவும் ஏற்ற தொழில் இது! மணிக்கணக்கில் உழைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் என்று ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் உழைத்தால் போதும், ஒருவர் மாதத்துக்கு ஐந்தாயிரம் ரூபாய்க்கும் குறையாமல் சம்பாதிக்கலாம்” என்றார்.
”மீன் வளர்ப்பு பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் இந்தத் தொழிலில் இறங்கினால் கஷ்டப்பட வேண்டியிருக்குமோ?” என்று அவரிடம் கேட்டோம்.

”பயந்து நடுங்குகிற அளவுக்கு இது கடினமானதல்ல. சில நாட்களிலேயே இந்தத் தொழிலைக் கற்றுக் கொள்ளலாம். வண்ண மீன்களை வளர்ப்பது எப்படி என்கிற பயிற்சி வகுப்பை நாங்களே அடிக்கடி நடத்துகிறோம். இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து, கற்றுக்கொண்டு அக்கறையோடு இந்தத் தொழிலைச் செய்தால் நிச்சயம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

தமிழ்நாட்டில் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் வண்ண மீன்கள் வளர்க்கத் தேவையான சீதோஷ்ண நிலையே உள்ளது. வண்ண மீன்களில் ஆயிரத்துக்கும் அதிகமான வகைகள் இருக்கின்றன. வெளிநாடுகளைச் சேர்ந்த இந்த மீன்கள் கடந்த 50 ஆண்டுகளில் ஏறக்குறைய நம் நாட்டு மீன்களாக மாறிவிட்டன. மீன்களின் நிறம் நன்றாக இருக்க வேண்டுமெனில் நிறைய சூரிய ஒளி வேண்டும். இயற்கையிலேயே இது நமக்கு அதிகமாக இருக்கிறது.

அடுத்து நல்ல தண்ணீர் வசதி. பூமியிலிருந்து எடுக்கப்படும் நல்ல தண்ணீரைக் கொண்டு வண்ண மீன்களை வளர்க்கலாம். வண்ண மீன்களை வளர்ப்பதாக இருந்தால் நீங்கள் மீன் வளர்க்க நினைக்கும் இடத்தில் கிடைக்கும் தண்ணீரை எங்களிடம் கொடுத்தாலே, அதில் உள்ள அமிலத்தன்மை, காரத்தன்மை பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்த்துச் சொல்லிவிடுவோம். தண்ணீரின் தன்மைக்கேற்ப என்ன மாதிரியான மீன்களை வளர்க்கலாம் என்பதையும் நாங்கள் சொல்வோம்” என்றார்.

இந்த மீன்களை எங்கே வாங்கமுடியும்?” என்று அடுத்த கேள்வியைப் போட்டதும், ”தமிழ்நாடு மீன்வளத் துறையிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது வண்ண மீன்களை விற்கிறவர்களிடமிருந்தும் வாங்கிக்கொள்ளலாம். வண்ண மீன்களை வளர்க்க மிகப்பெரிய அளவில் இடமும் தேவையில்லை. ஒன்றிரண்டு சென்ட் இடம் இருந்தாலே போதும், நீங்கள் ஆயிரக்கணக்கில் மீன்களை வளர்த்து விற்கலாம். தவிர, மீன்களை வளர்க்க ஆகும் தினப்படி செலவும் குறைவுதான். வண்ண மீன்களை வளர்க்கிறவர்கள் எல்லா வகையான மீன்களையும் வளர்க்கவேண்டிய அவசியம் இல்லை. மார்க்கெட்டில் டிமாண்ட் இருக்கும் 2, 3 வகை மீன்களை மட்டும் தேர்வு செய்து வளர்க்கலாம்” என்றவர், மீன் தொட்டிகளை அமைக்கத் தேவையான தொழில்நுட்பம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
”இது மிக எளிமையானது. சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் கிணற்று உறையினால் தொட்டிகளைக் கட்டி, மீன்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிடலாம். மீன்களுக்குத் தேவையான உணவை எப்படித் தயார் செய்வது என்பது குறித்தும் நாங்களே கற்றுத் தருகிறோம். மீன்களுக்குச் சில வகையான நோய்கள் வரும். அப்படி வந்தால் அதை எப்படி குணப்படுத்துவது என்பது பற்றியும் சொல்லித் தருகிறோம்” என்றவர், அடுத்து முக்கியமான பிரச்னையான விற்பனை பற்றிச் சொன்னார்.

”மீன்களை வளர்த்தபிறகு எங்கே போய் விற்பது என்கிற கவலையும் வேண்டாம். நீங்கள் சென்னையில் இருக்கும்பட்சத்தில் வண்ண மீன்களை வாங்குவதற்காகவே கொளத்தூரில் பல நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களே வாங்கிக்கொள்வார்கள். இல்லையெனில், வண்ண மீன்களை விற்பனை கடைகளிடம் கொடுத்துவிடலாம்” என்றார் அவர்.
வண்ண மீன்களை வளர்த்தால் நல்ல வருமானமுண்டு என்பது ஒரு பக்கமிருக்க, இந்தத் தொழிலை இன்னும் வளர்க்க மத்திய அரசாங்கம் பல உதவிகளைச் செய்து வருகிறது. அதில் முக்கியமான விஷயம் மானியம். வண்ண மீன்களை வளர்ப்பவர்களுக்கு மானியம் உள்பட பல விதமான உதவிகளைச் செய்வதற்காகவே ‘கடல்சார் பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம்’ என்கிற ஓர் அமைப்பை மத்திய அரசாங்கம் அமைத்திருக்கிறது. அரசின் மானியத்தோடு வண்ண மீன்களை வளர்க்க நினைக்கிறவர்கள் இந்த நிறுவனத்தோடு தொடர்பு கொள்வது அவசியம். இந்த நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் சதீஷ் அதுபற்றி விளக்கினார்.

”கடல்சார் பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்தின் அலுவலகம் தமிழ்நாட்டில் சென்னையிலும் தூத்துக்குடியிலும் இருக்கிறது. இரண்டு இடங்களில் எங்கு வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். நாங்கள் மூன்று நிலைகளில் வண்ண மீன்கள் வளர்ப்புக்கான மானியத்தைக் கொடுக்கிறோம். முதல் நிலை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கானது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வண்ண மீன் வளர்க்க நினைக்கும் ஒருவருக்கு 1.5 சென்ட் நிலம் இருந்தால் போதும். இரண்டாவது நிலையில் இருப்பவர்களுக்கு 5 சென்ட் நிலமும் மூன்றாவது நிலையில் இருப்பவர்களுக்கு 10 சென்ட் நிலமும் இருக்க வேண்டும்.
வண்ண மீன்களை வளர்ப்பவர்களுக்கு 50% மானியம் கொடுக்கிறோம். முதல் நிலையில் இருப்பவர்களுக்கு 75 ஆயிரமும் இரண்டாம் நிலையில் இருப்பவர்களுக்கு 2 லட்சமும், மூன்றாம் நிலையில் இருப்பவர்களுக்கு 7.5 லட்சமும் மானியமாகக் கொடுக்கிறோம். இந்த மானியத்தை மீன் வளர்ப்பவர்களிடம் நாங்கள் முதலிலேயே கொடுக்க மாட்டோம்… நேரடியாகவும் தரமாட்டோம். வங்கியில் வாங்கிய கடனை அடைக்கும் முகமாக அவர்களிடம்தான் பணத்தைக் கொடுப்போம்” என்றார் அவர்.

வண்ண மீன்களை தமிழகத்தின் பல பகுதிகளில் சிறிய அளவில் வளர்த்து வந்தாலும், சென்னையில் உள்ள கொளத்தூர்தான் பெருமளவில் உற்பத்தி செய்யும் தலைமைக் கேந்திரமாக இருக்கிறது. கொளத்தூரைச் சுற்றி விநாயகபுரம், லட்சுமிபுரம், காவங்கரை, பட்மேடு என பல இடங்களில் வண்ண மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இவர்கள் ‘தமிழ்நாடு வண்ண மீன் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச் சங்கம்’ என்கிற ஓர் அமைப்பையும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த அமைப்பின் தலைவர் ஆர்.ராஜராஜனைச் சந்தித்தோம்.

”நிறைய வளர்ச்சி உடைய இந்தத் தொழிலுக்கு அரசாங்கத்தின் சரியான கவனிப்பு இல்லாததால் வளராமலே இருக்கிறது. எங்களுக்குத் தரப்படும் மின்சாரத்துக்கு கமர்ஷியல் கேட்டகிரியில் கட்டணம் வசூலிக்கிறது மின் வாரியம். கிட்டத்தட்ட 7 ரூபாய்க்கு மேல் மின்சாரம் கட்டுவதால் எங்களுக்குக் கிடைக்கும் கொஞ்சநஞ்ச லாபம் கரன்ட் பில் கட்டுவதற்கே சரியாகப் போய்விடுகிறது. சிறுதொழிலுக்கு விதிக்கப்படும் கட்டணமே எங்களிடம் மின் வாரியம் வசூலிக்க வேண்டும். அதற்கு தமிழக அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றார் அவர்.

இந்தத் தொழிலில் இருப்பவர்கள் குறையாக சுட்டிக் காட்டும் விஷயங்கள் சில ஒருபக்கம் இருந்தாலும், வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு நிச்சயமாக வண்ணமீன் வளமான வாழ்க்கையைக் கொடுக்கும்!

Tuesday, March 2, 2010

காலன் வளர்ப்பு ..... சுமா நினைக்காதிங்க 13ரூபாயில் நல்ல லாபங்க

நேத்து பெஞ்ச மழையில முளைச்ச காளான்..’ என்று ஒரு பழமொழி உண்டு. இப்படி சாதாரணமாக மதிக்கப்படுகிற காளான்தான் அசாதாரணமான வருமானத்தைத் தேடித் தருகிறது வசுமதிக்கு! PODAKKUDI இருக்கிற அவர் வீட்டினுள் நுழைந்ததுமே வைக்கோல் வாசனைதான் நம்மை வரவேற்கிறது. கீற்றுக் கொட்டகை வேயப்பட்ட மொட்டை மாடிக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் .

அந்தக் கொட்டகையில், பாக்ஸிங் பயிற்சிக்காகத் தொங்க விடப்பட்டிருக்கும் மூட்டைகள் போல, பாலிதீன் கவர் பண்டல்கள் கட்டி விடப்பட்டிருக்க, அவற்றைச் சுற்றிலும் பூத்திருக்கின்றன காளான்கள்.

”அத்தனையும் காசு!” என்றபடி உற்சாகமாக வந்து உட்காருகிற, தெரிந்த ஒருவரிடம் சிப்பிக் காளான் வளர்ப்பு பற்றித் தெரிந்து கொண்டு முழுமூச்சாக இதில் இறங்கியிருக்கிறார்.

”எல்லா சீசன்லயும் காளான்களை சாகுபடி செய்யலாம். நல்ல லாபத்தைத் தர்ற தொழில் இது!” என்றவர், ஒரு கிலோ காளான் சாகுபடி செய்வது பற்றி விளக்கினார்..

”தேவையானவை: 10 கிலோ வைக்கோல், 12க்கு 24 இன்ச் அளவுள்ள ஹெச்.எம் பாலிதீன் கவர்கள், திசு வளர்ப்பு முறையில் பெறப்பட்ட காளான் விதை – 175 கிராம், கார்பன்டைசின் பவுடர் – 10 கிராம், ஃபார்மலின் – 125 மி.லி., நைலான் ரப்பர் பேண்ட்கள், நைலான் கயிறு.

காளான் விதைகள், காளான் பண்ணைகள்ல கிடைக்கும். சென்னை, கோவை மாதிரியான நகரங்கள்ல காளான் பண்ணைகள் இருக்கு. கெமிக்கல் பொருட்களையும் அங்கயே வாங்கிக்கலாம். ரப்பர் பேண்ட், நைலான் கயிறு, பாலிதீன் பைகளை மொத்த விலை கடைகள்ல வாங்கலாம்.

சாகுபடி செய்யும் முறை: முதல்ல 100 லிட்டர் தண்ணியில கார்பன்டைசின் பவுடர் 10 கிராம், ஃபார்மலின் 125 மி.லி-ங்கிற அளவுல ஊத்திக்கணும். இதுல வைக்கோலை நனைச்சு, பத்துலருந்து 12 மணி நேரம் ஊற வைக்கணும். இப்படி ஊற வைக்கறதால வைக்கோல்ல இருக்கற பூஞ்சைகள், நுண்கிருமிகள் அழிஞ்சிடும். இந்த வைக்கோலை காட்டன் துணி.. இல்லேன்னா, சாக்குல பரப்பி, ஈரம் இல்லாத அளவுல நிழல்ல உலர்த்தணும்
பாலிதீன் பையோட அடி முனையை நைலான் ரப்பர் பேண்டால இறுக்கமா சிலிண்டர் வடிவம் கிடைக்கும். அதுல ரெண்டு கையளவு திணிச்சு, ஒவ்வொரு அடுக்கோட ஓரத்துலயும் நடுவுலயும் கைப்பிடி அளவு காளான் விதையைத் தூவணும்.இதே மாதிரி அஞ்சு அடுக்கா வைக்கோலை வெச்சு, விதைகளைத் தூவணும். கடைசியா காளான் விதை களை தூவி, பையோட மேல் நுனியை நைலான் ரப்பரால காத்துப் புகாத மாதிரி இறுக்கமாக் கட்டணும். இந்தப் பைகளை ‘பெட்’னு சொல்லுவோம்.இப்ப, இந்த கவரைச் சுத்திலும் பால்பாயின்ட் பேனாவோட முனையால எட்டுலருந்து பத்துத் துளைகள் வரை போட்டுக்கணும். இந்தத் துளைகள் வழியாத்தான் காளான் மொட்டுக்கள் வெளியே வரும்.இந்தப் பைகளை ஒரு ரூம்ல நைலான் கயிறுகள்ல கட்டித் தொங்க விடணும் (பார்க்க : படம்). குறைந்த பட்சம் 150 சதுர அடியாவது இருக்கணும் அந்த ரூம். தளத்தோட உயரத்துக்கு ஏத்த மாதிரி ஒரு கயித்துல 5 (அ) 6 ‘பெட்’களை கட்டி விடலாம்..” என்கிறவர், தன் வீட்டு மொட்டை மாடியிலேயே கூரை வேய்ந்து, அதைக் காளான் வளருவதற்கேற்ற அறையாக மாற்றியிருக்கிறார்.

”காளான் குறைஞ்ச வெப்ப நிலையிலதான் வள ரும். அதனால, இந்தப் பைகள் இருக்குற ரூமைச் சுத்தி கோணிப்பைகளை கட்டி வைக்கணும். கோணிப்பைகள் மேல, தினமும் காலையில தண்ணி தெளிக்கணும். இத னால, ரூமோட வெப்பநிலை 10லருந்து 15 டிகிரி செல்ஷியஸ்க்குள்ள இருக்கற மாதிரி பார்த்துக்கலாம்..” என்கிறவரின் அறையில் ஒரு தெர்மாமீட்டர் தொங்குவதைக் காண முடிந்தது.

”ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா, பைகளை தொங்க விடுற தேதியைக் குறிச்சு வைக்கிறது! தினமும் சரியான வெப்பநிலை இருக்குற மாதிரி பார்த்துக்கிட்டா போதும்.. பதினஞ்சாவது நாள் துளைகள் வழியா காளான் மொட்டுக்கள் வெளிப்பட்டுடும். அதுக்குப் பிறகு அப்பப்ப, ஸ்ப்ரே பாட்டில்ல தண்ணியை விட்டு, மொட்டுக்கள் மேல தெளிக்கணும்.

23-வது நாள்ல காளான் நல்லா முத்திடும். அப்ப ஒரு பையிலருந்து 400 கிராம் முதல் 600 கிராம் காளானை அறுவடை செய்யலாம். இப்ப, வேற இடங்கள்ல துளை போடணும். 26-வது நாள்ல திரும்பவும் 300 கிராம் முதல் 450 கிராம் காளானை அறுவடை செய்யலாம். இதே மாதிரி மொத்தம் அஞ்சு முறை துளைகள் போட்டு காளானை அறுவடை செய்ய முடியும்
அறுவடை செய்யப்பட்ட காளான்களை ஒரு நாள் மட்டும்தான் வெளியில வைக்கலாம். ஃப்ரிட்ஜ்லன்னா ரெண்டு நாள் வரை வைக்கலாம். இல்லேன்னா, கெட்டுப் போய்டும்” என்று தெளிவாக விளக்கியவர், மார்க்கெட்டிங் பற்றியும் சொன்னார்.

”ஓட்டல்கள்ல ஒரு கிலோ காளான் 75 ருபாய்னு வாங்கிக்கறாங்க. அக்கம்பக்கத்துல இருக்கிறவங்களுக்கு 200 கிராம் பாக்கெட்டை 15 ரூபாய்க்கும், மத்தவங்களுக்கு 20 ரூபாய்க்கும் கொடுக்கிறேன். இந்தக் காளான் வளர்ப்புல செலவு குறைவு, வரவு அதிகம்” என்றவர், அதுபற்றியும் சொன்னார்..
”மாடியில கூரை போடுறதுக்கு எட்டாயிரம் ரூபாய் செலவாச்சு. ஒரு கோணி 15 ரூபா. இது ரெண்டும் ஒரு தடவை மட்டும் பண்ற முதலீடு. மத்தபடி ஒரு கிலோ பாலிதீன் கவர் – 95 ரூபா, 175 கிராம் காளான் விதைப் – 15 ரூபா (இந்த 175 கிராம் விதையை ஒரு பெட்டுக்குப் போட முடியும்), கார்பன்டைசின் பவுடர் 1/2 கிலோ – 310 ரூபா, ஃபார்மலின் 1 லிட்டர் – 25 ரூபா.. இது மட்டும்தான் செலவு. அஞ்சு பெட்டுக்கு நீங்களே கணக்குப் பார்த்துக்குங்க.. குறைஞ்சது ரெண்டு மடங்கு வருமானம் கிடைக்கும்!” என்றார் சந்தோஷமாக.

என்னங்க.. காளான் வளர்த்து காசு அள்ள கௌம்பிட்டீங்களா?