பொதக்குடியில் இருந்தாலும் பிசினஸ்

பண்ணலாமா...........

Tuesday, March 2, 2010

காலன் வளர்ப்பு ..... சுமா நினைக்காதிங்க 13ரூபாயில் நல்ல லாபங்க

நேத்து பெஞ்ச மழையில முளைச்ச காளான்..’ என்று ஒரு பழமொழி உண்டு. இப்படி சாதாரணமாக மதிக்கப்படுகிற காளான்தான் அசாதாரணமான வருமானத்தைத் தேடித் தருகிறது வசுமதிக்கு! PODAKKUDI இருக்கிற அவர் வீட்டினுள் நுழைந்ததுமே வைக்கோல் வாசனைதான் நம்மை வரவேற்கிறது. கீற்றுக் கொட்டகை வேயப்பட்ட மொட்டை மாடிக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் .

அந்தக் கொட்டகையில், பாக்ஸிங் பயிற்சிக்காகத் தொங்க விடப்பட்டிருக்கும் மூட்டைகள் போல, பாலிதீன் கவர் பண்டல்கள் கட்டி விடப்பட்டிருக்க, அவற்றைச் சுற்றிலும் பூத்திருக்கின்றன காளான்கள்.

”அத்தனையும் காசு!” என்றபடி உற்சாகமாக வந்து உட்காருகிற, தெரிந்த ஒருவரிடம் சிப்பிக் காளான் வளர்ப்பு பற்றித் தெரிந்து கொண்டு முழுமூச்சாக இதில் இறங்கியிருக்கிறார்.

”எல்லா சீசன்லயும் காளான்களை சாகுபடி செய்யலாம். நல்ல லாபத்தைத் தர்ற தொழில் இது!” என்றவர், ஒரு கிலோ காளான் சாகுபடி செய்வது பற்றி விளக்கினார்..

”தேவையானவை: 10 கிலோ வைக்கோல், 12க்கு 24 இன்ச் அளவுள்ள ஹெச்.எம் பாலிதீன் கவர்கள், திசு வளர்ப்பு முறையில் பெறப்பட்ட காளான் விதை – 175 கிராம், கார்பன்டைசின் பவுடர் – 10 கிராம், ஃபார்மலின் – 125 மி.லி., நைலான் ரப்பர் பேண்ட்கள், நைலான் கயிறு.

காளான் விதைகள், காளான் பண்ணைகள்ல கிடைக்கும். சென்னை, கோவை மாதிரியான நகரங்கள்ல காளான் பண்ணைகள் இருக்கு. கெமிக்கல் பொருட்களையும் அங்கயே வாங்கிக்கலாம். ரப்பர் பேண்ட், நைலான் கயிறு, பாலிதீன் பைகளை மொத்த விலை கடைகள்ல வாங்கலாம்.

சாகுபடி செய்யும் முறை: முதல்ல 100 லிட்டர் தண்ணியில கார்பன்டைசின் பவுடர் 10 கிராம், ஃபார்மலின் 125 மி.லி-ங்கிற அளவுல ஊத்திக்கணும். இதுல வைக்கோலை நனைச்சு, பத்துலருந்து 12 மணி நேரம் ஊற வைக்கணும். இப்படி ஊற வைக்கறதால வைக்கோல்ல இருக்கற பூஞ்சைகள், நுண்கிருமிகள் அழிஞ்சிடும். இந்த வைக்கோலை காட்டன் துணி.. இல்லேன்னா, சாக்குல பரப்பி, ஈரம் இல்லாத அளவுல நிழல்ல உலர்த்தணும்
பாலிதீன் பையோட அடி முனையை நைலான் ரப்பர் பேண்டால இறுக்கமா சிலிண்டர் வடிவம் கிடைக்கும். அதுல ரெண்டு கையளவு திணிச்சு, ஒவ்வொரு அடுக்கோட ஓரத்துலயும் நடுவுலயும் கைப்பிடி அளவு காளான் விதையைத் தூவணும்.இதே மாதிரி அஞ்சு அடுக்கா வைக்கோலை வெச்சு, விதைகளைத் தூவணும். கடைசியா காளான் விதை களை தூவி, பையோட மேல் நுனியை நைலான் ரப்பரால காத்துப் புகாத மாதிரி இறுக்கமாக் கட்டணும். இந்தப் பைகளை ‘பெட்’னு சொல்லுவோம்.இப்ப, இந்த கவரைச் சுத்திலும் பால்பாயின்ட் பேனாவோட முனையால எட்டுலருந்து பத்துத் துளைகள் வரை போட்டுக்கணும். இந்தத் துளைகள் வழியாத்தான் காளான் மொட்டுக்கள் வெளியே வரும்.இந்தப் பைகளை ஒரு ரூம்ல நைலான் கயிறுகள்ல கட்டித் தொங்க விடணும் (பார்க்க : படம்). குறைந்த பட்சம் 150 சதுர அடியாவது இருக்கணும் அந்த ரூம். தளத்தோட உயரத்துக்கு ஏத்த மாதிரி ஒரு கயித்துல 5 (அ) 6 ‘பெட்’களை கட்டி விடலாம்..” என்கிறவர், தன் வீட்டு மொட்டை மாடியிலேயே கூரை வேய்ந்து, அதைக் காளான் வளருவதற்கேற்ற அறையாக மாற்றியிருக்கிறார்.

”காளான் குறைஞ்ச வெப்ப நிலையிலதான் வள ரும். அதனால, இந்தப் பைகள் இருக்குற ரூமைச் சுத்தி கோணிப்பைகளை கட்டி வைக்கணும். கோணிப்பைகள் மேல, தினமும் காலையில தண்ணி தெளிக்கணும். இத னால, ரூமோட வெப்பநிலை 10லருந்து 15 டிகிரி செல்ஷியஸ்க்குள்ள இருக்கற மாதிரி பார்த்துக்கலாம்..” என்கிறவரின் அறையில் ஒரு தெர்மாமீட்டர் தொங்குவதைக் காண முடிந்தது.

”ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா, பைகளை தொங்க விடுற தேதியைக் குறிச்சு வைக்கிறது! தினமும் சரியான வெப்பநிலை இருக்குற மாதிரி பார்த்துக்கிட்டா போதும்.. பதினஞ்சாவது நாள் துளைகள் வழியா காளான் மொட்டுக்கள் வெளிப்பட்டுடும். அதுக்குப் பிறகு அப்பப்ப, ஸ்ப்ரே பாட்டில்ல தண்ணியை விட்டு, மொட்டுக்கள் மேல தெளிக்கணும்.

23-வது நாள்ல காளான் நல்லா முத்திடும். அப்ப ஒரு பையிலருந்து 400 கிராம் முதல் 600 கிராம் காளானை அறுவடை செய்யலாம். இப்ப, வேற இடங்கள்ல துளை போடணும். 26-வது நாள்ல திரும்பவும் 300 கிராம் முதல் 450 கிராம் காளானை அறுவடை செய்யலாம். இதே மாதிரி மொத்தம் அஞ்சு முறை துளைகள் போட்டு காளானை அறுவடை செய்ய முடியும்
அறுவடை செய்யப்பட்ட காளான்களை ஒரு நாள் மட்டும்தான் வெளியில வைக்கலாம். ஃப்ரிட்ஜ்லன்னா ரெண்டு நாள் வரை வைக்கலாம். இல்லேன்னா, கெட்டுப் போய்டும்” என்று தெளிவாக விளக்கியவர், மார்க்கெட்டிங் பற்றியும் சொன்னார்.

”ஓட்டல்கள்ல ஒரு கிலோ காளான் 75 ருபாய்னு வாங்கிக்கறாங்க. அக்கம்பக்கத்துல இருக்கிறவங்களுக்கு 200 கிராம் பாக்கெட்டை 15 ரூபாய்க்கும், மத்தவங்களுக்கு 20 ரூபாய்க்கும் கொடுக்கிறேன். இந்தக் காளான் வளர்ப்புல செலவு குறைவு, வரவு அதிகம்” என்றவர், அதுபற்றியும் சொன்னார்..
”மாடியில கூரை போடுறதுக்கு எட்டாயிரம் ரூபாய் செலவாச்சு. ஒரு கோணி 15 ரூபா. இது ரெண்டும் ஒரு தடவை மட்டும் பண்ற முதலீடு. மத்தபடி ஒரு கிலோ பாலிதீன் கவர் – 95 ரூபா, 175 கிராம் காளான் விதைப் – 15 ரூபா (இந்த 175 கிராம் விதையை ஒரு பெட்டுக்குப் போட முடியும்), கார்பன்டைசின் பவுடர் 1/2 கிலோ – 310 ரூபா, ஃபார்மலின் 1 லிட்டர் – 25 ரூபா.. இது மட்டும்தான் செலவு. அஞ்சு பெட்டுக்கு நீங்களே கணக்குப் பார்த்துக்குங்க.. குறைஞ்சது ரெண்டு மடங்கு வருமானம் கிடைக்கும்!” என்றார் சந்தோஷமாக.

என்னங்க.. காளான் வளர்த்து காசு அள்ள கௌம்பிட்டீங்களா?

14 comments:

  1. காளான் வளர்ப்பு பயிற்சி நன்றாக இருந்தது,காளான் வளர்ப்பு பற்றி மேலும் அறிய விரும்புகிறேன் வளர்க்கும் இடங்களின் முகவரி அனுப்பி வைத்தால் தங்கள் மூலம் பயன் அடைந்து கொள்வேன்

    எனது மின் அஞ்சல் முகவரி
    (mhn.macro@gmail.com)

    ReplyDelete
    Replies
    1. R FOODS
      KAMAL NAGER
      THOVALAI
      NAGER COIL
      9486562386

      Delete
    2. plz madam unga number plz kingofdilip007@gmail.com plz help me

      Delete
  2. காளான் வளர்ப்பு பயிற்சி நன்றாக இருந்தது,காளான் வளர்ப்பு பற்றி மேலும் அறிய விரும்புகிறேன் வளர்க்கும் இடங்களின் முகவரி அனுப்பி வைத்தால் தங்கள் மூலம் பயன் அடைந்து கொள்வேன்

    எனது மின் அஞ்சல் முகவரி
    mahadevan_145@yahoo.co.in

    ReplyDelete
  3. காளான் வளர்ப்பு பயிற்சி நன்றாக இருந்தது,காளான் வளர்ப்பு பற்றி மேலும் அறிய விரும்புகிறேன் வளர்க்கும் இடங்களின் முகவரி அனுப்பி வைத்தால் தங்கள் மூலம் பயன் அடைந்து கொள்வேன்

    எனது மின் அஞ்சல் முகவரி
    mailofsunder@yahoo.co.in

    R

    ReplyDelete
  4. காளான் வளர்ப்பு பயிற்சி நன்றாக இருந்தது,காளான் வளர்ப்பு பற்றி மேலும் அறிய விரும்புகிறேன் வளர்க்கும் இடங்களின் முகவரி அனுப்பி வைத்தால் தங்கள் மூலம் பயன் அடைந்து கொள்வேன்

    ReplyDelete
  5. காளான் வளர்ப்பு பயிற்சி நன்றாக இருந்தது,காளான் வளர்ப்பு பற்றி மேலும் அறிய விரும்புகிறேன் வளர்க்கும் இடங்களின் முகவரி அனுப்பி வைத்தால் தங்கள் மூலம் பயன் அடைந்து கொள்வேன் .......

    எனது மின் அஞ்சல் முகவரி
    ramu9995@gmail.com

    ReplyDelete
  6. காளான் வளர்ப்பு பயிற்சி நன்றாக இருந்தது,காளான் வளர்ப்பு பற்றி மேலும் அறிய விரும்புகிறேன் வளர்க்கும் இடங்களின் முகவரி அனுப்பி வைத்தால் தங்கள் மூலம் பயன் அடைந்து கொள்வேன் .......

    ReplyDelete
  7. காளான் வளர்ப்பு பயிற்சி நன்றாக இருந்தது,காளான் வளர்ப்பு பற்றி மேலும் அறிய விரும்புகிறேன் வளர்க்கும் இடங்களின் முகவரி அனுப்பி வைத்தால் தங்கள் மூலம் பயன் அடைந்து கொள்வேன்

    ReplyDelete
  8. காளான் வளர்ப்பு பயிற்சி நன்றாக இருந்தது,காளான் வளர்ப்பு பற்றி மேலும் அறிய விரும்புகிறேன் வளர்க்கும் இடங்களின் முகவரி அனுப்பி வைத்தால் தங்கள் மூலம் பயன் அடைந்து கொள்வேன் .......

    எனது மின் அஞ்சல் முகவரி
    mani86807240@gmail.com
    9965657240

    ReplyDelete
    Replies
    1. i am ambethkar pls give me
      kalan development address in tanilnadu pls send my mail id
      my mail id :ambethkarit10@gmail.com

      Delete
  9. i am krishnakumar trichy i need more information about mushroom plz call me 9842990086

    ReplyDelete
  10. I like more detail i want pl sent kalan development add or ple call me 9600086243 chennai

    ReplyDelete
  11. Vaithi
    காளான் வளர்ப்பு பயிற்சி நன்றாக இருந்தது,காளான் வளர்ப்பு பற்றி மேலும் அறிய விரும்புகிறேன் வளர்க்கும் இடங்களின் முகவரி அனுப்பி வைத்தால் தங்கள் மூலம் பயன் அடைந்து கொள்வேன் .......

    My mail id vaithinadhan@gmail.com

    ReplyDelete